எமது நடைமுறை உதவித் திட்டங்கள்......... 

இம் மாதம் (21.08.2016 ஞாயிற்றுக்கிழமை)  10மாணவர்களுக்கு துளி நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தனபாலன் அபிஷேக்கின் நிதிப்பங்களிப்புடன் துவிச்சக்கரவண்டி வழங்குவதற்காக  கீழ்காணப்படும் படிவம்  மாணவர்களுக்கு வழங்கபபட்டுள்ளது,

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 

இப் படிவம் ஒவ்வொரு தவணைக்கான விடுமுறை விடுவதற்கு ஒரு கிழமைக்கு  முன்னதாக  மாணவர்களுக்கு வழங்கப்படும்   வகுப்பாசிரியரினால் நிரப்பப்பட்டு,  மாணவரினால்  துளி நற்பணி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்வேளை  பாடசாலை ஆரம்பிப்பதற்கு  ஒரு கிழமைக்கு  முன்னதாக கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 


 துளி நற்பணி மன்றத்தினால் உதவி வழங்கப்படும் மாணவர்கள்,திறைமைச்சித்திகள் பெறும் போது அவர்களை  மேலும் ஊக்கிவிக்கும் நோக்கமாக அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான படிவம்,மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விசாராத திறமைகளை ஊக்கிவிக்கும் நோக்குடன் திறமையான மாணவர்களுக்கு கொடுப்பனவுகள்   வழங்கப்படும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''        
ஊக்கிவிப்புடன் கூடிய உதவி 

 .

இலவசம்,அன்பளிப்பு எனும் பெயரில் மாணவர்களுக்கு செய்யும் உதவிகளால்  அதைப் பெறும் மாணவர் மத்தியில் தாழ்வு மனப்பாங்கு ஏற்படுவதுடன்,தொடர்ந்து அவற்றையே எதிர்பார்க்கும் தன்மையும்,இலவசம் தானே எப்படியும் செலவு செய்யலாம் என்ற எண்ணமும், அது கிடைக்கும் வழியையும்  அறிந்துகொள்ள முற்படுவதில்லை. இதனால்  துளி நற்பணி மன்றமானது வன்னி மாணவர்களின்  கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும்  முகமாக வறிய மாணவர்களை  இனம் கண்டு உதவியினை  செய்து  வருவதுடன்  மாணவர்கள் மத்தியில்  தன்னம்பிக்கை, துணிவு, நாட்டுப்பற்று, உதவும்மனப்பான்மை, உடல்ஆரோக்கியம், திறமையாளரை பாராட்டும் மனப்பக்குவம் ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் முகமாக மாணவர்களிடையே பலவிதமான போட்டிகளை எற்பாடு செய்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வெகுமதியாக கற்றல் உபகரணங்களாகவோ பணப்பரிசில்களாகவோ வழங்கயிருக்கிறோம் இதனால் தமது  உழைப்புக்கு கிடைக்கும் வெகுமதி  என்பதால் அந்த மாணவனுக்கு  மகிழ்ச்சியும்தன்னம்பிக்கையும் ஏற்படுவதுடன்  பலரின் பாராட்டும் கிடைப்பதால் மேலும் பலவெற்றிகளை பெறவேண்டும் என்ற தூண்டுதலும் ஏற்படுகின்றது.

*************************************************************************************************************

வன்னி மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தலுடன் , மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் துளி நற்பணி மன்றத்தினால் நாடாத்தப்படும் கட்டுரைப்போட்டி .

1ம் இடம் ஒருவருக்கு மட்டுமே 25,000 ரூபா பணப்பரிசு.

2ம் இடம்  நாலு பேருக்கு 15,000 ரூபாபெறுமதியான கற்றல் உபகரணமோ அல்லது பணமாகவோ வழங்கப்படும்.

3ம் இடம் 10பேருக்கு 5,000 ரூபாபெறுமதியான கற்றல் உபகரணமோ அல்லது பணமாகவோ வழங்கப்படும்.

பெருகிவரும் போதைப்பொருள் பாவனையும் அதனை ஒழிப்பதற்காக மாணவர்களாகிய நாம் செய்யவேண்டியவை உடனடி நடவடிக்கைகள் , எனும் தலைப்பில் மேடைப்பேச்சுக்கு தகுந்தவாறு கட்டுரை எழுதுதல்.

 

போட்டி விதிமுறைகளும், மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும்.

1.கிளிநொச்சி கல்விவலயத்தில் அடங்கும் 1AB தரத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் 9ம்,10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.

கிளிநொச்சி  கல்விவலயத்தில் கலந்து கொள்ளும்பாடசாலைகளின் பெயர்கள்.

·                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

           

2. மூன்று கிழமைக்குள் கட்டுரைகள்  எழுதி  சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

3.கட்டுரைத்தாளில் பெயர் எழுதப்படல் கூடாது  தரப்படும் குறீயீட்டு இலக்கமும்,பாடசாலையின் பெயர், படிக்கும் வகுப்பு  என்பன  எழுதப்படல் வேண்டும்.

4.வேற்றுமொழிச்சொற்கள் பயன்படுத்தல் கூடாது,எழுத்துப்பிழைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

5. 1ம் இடம் பெறும் கட்டுரை பரிசில் வழங்கப்படும் தினத்தன்று  பேச்சுத்திறமைவாய்ந்த மாணவர் ஒருவர் மூலம் மேடையில்  பேசப்படும்.

6.1ம் பரிசில் பெறுபவர் 5000ரூபாவையும், 2ம்  பரிசில் பெறுபவர் 1000ரூபாவையும், 3ம்  பரிசில் பெறுபவர் 500ரூபாவையும்  ஏழை மாணவருக்காக அன்பளிப்பு செய்தல் வேண்டும்.

 7. பாடசாலை ரீதியாக போட்டி  முடிவுகள்,பரிசில் வழங்கப்படும் இடம், திகதி என்பனவும் அறிவிக்கப்படும்.

8.கட்டுரை தெரிவு செய்யப்படும் முறையானதுதிறமை வாய்ந்த ஆசிரியர் குழுவால் தெரிவு செய்யப்படும். முதல்தடவை ஒரு ஆசிரியர் குழுவாலும் ,இரண்டாம்தடவைஇன்னோர்ஆசிரியர்  குழுவாலும்தெரிவுசெய்யப்பட்டு  இறுதியில் இரு குழுக்களாலும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

 

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.