இல்லாதவனுக்கு கொடுக்கின்றேன் என்றால் -என்னிடம்          நிறைய இருப்பதாக பொருள் இல்லை. நான் ஒன்றும்மில்லாத நிலையில் வலியை அனுபவித்தவன்   

                              என்பதால்தான். 

************************************************************************************************************

வளரும் பயிர்கள் வாடாதிருக்க நீராயிருப்பிபோம் நாம்……
கல்மடுநகரில் உள்ள கஜந்தா சிறுவர் பாடசாலைக்கு சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மின்சார இணைப்பு செய்வதற்கான நிதிஉதவியினை வழங்குமாறு பாடசாலை நிர்வாகத்தினரும் ,பெற்றோரும் துளி நற்பணி மன்றத்திடம் வேண்டியிருந்தனர். இதற்கிணங்க அவுஸ்ரேலியாவின் Melbourne நகரில் உள்ள சந்திரன் துவாரகன் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்த நிதியில் இருந்து 23000ரூபா வழங்கப்பட்டு மின்சார இணைப்பு செய்து கொடுக்கப்பட்டது. 31/01/2017 அன்று செவ்வாய்கிழமை துளி நற்பணி மன்ற தலைவர் பா.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்ற செயலாளர் சி. யாதவன் மற்றும் மன்ற உறுப்பினர் பொ.மணிமாறன் ஆகியோருடன் கல்மடுநகர் அ.த.க பாடசாலை அதிபர் திரு கெ.சிறீரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தார் . நிதி உதவியினை வழங்கிய சந்திரன் துவராகனுக்கு துளி நற்பணி மன்றத்தினர் மற்றும்.சிறுவர் பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோரும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.உறவுகளே!! உங்கள் பிறந்தநாளுக்கு பிறருக்கு உதவுங்கள்…..

ஜெர்மனி Essen நகரில் வசிக்கும் சவுந்தரராஜன், கமலினி தம்பதிகளின்செல்வப் புதல்வி சர்விகா அவர்களின் 10வது பிறந்த நாளான இன்று 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை தாயகத்தில் கல்மடு நகரில் உள்ள 21 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக 2017 ஆண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன . இந்த நிகழ்வாவது கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அ. த. க பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சுப்பிரமணியம் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. ம.றோமியல் மற்றும் துளி நற்பணி மன்ற தலைவர் பா.சசிகரன், செயாலாளர் சி. யாதவன் உறுப்பினர்களான பொ.மணிமாறன், பா,சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேற்படி நிகழ்விற்கான நிதியான 25000ரூபாவினை சர்விகாவின் பெற்றோரினால் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்தனர்.அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன்.நோய் நொடியற்று,நலமுடன் பல்கலைபெற்று, உதவி செய்யும் மனப்பாங்குடன் நீண்டகாலம் வாழவேண்டுமென மாணவர்கள் சார்பாகவும் துளி நற்பணி மன்றம் சார்பிலும் சர்விகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


அறியாமை அகற்றும் கல்வி உதவுவது, நிழல் தரும் மரம் நடுவது.இவை இரண்டும் நாம் மறைந்த பின்பும் நமக்கான நன்மைகளை தேடித் தரும்,


அவுஸ்ரேலியாவின் perth நகரில் வசிக்கும் ஆவூர் அஸ்வின்,பிரதீஸ்,கமலநாதன்,சிவதர்சன் ஆகிய 4 நண்பர்கள் இணைந்து ஆரம்ப உதவியாக துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு 35000ரூபாவை அனுப்பி வைத்திருந்தனர்,இப் பணத்திலிருந்து 25 மாணவர்களுக்கு 2017ஆண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன், மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது, இந் நிகழ்வானது 21/01/2017 அன்று சனிக்கிழமை கல்மடுநகரில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் துளி நற்பணி மன்றத்தின் 2017ம் ஆண்டுக்கான புதிய தலைவர் பா.சசிகரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை அதிபர் திரு சுப்பிரமணியம் ரவீந்திரன் மற்றும் கல்மடுநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு.இ.யோகானந்தராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வுக்கான சகல ஒழுங்கினையும் மன்றத்தின் செயலாளர் சி,யாதவனுடன் மன்றஉறுப்பினர்களான பொ.மணிமாறன், மயூரன் ஆகியோர் இணைந்து சிறப்புற செய்தனர். மேற்படி நிகழ்வுக்கான நிதி உதவியினை வழங்கிய ஆவூர் அஸ்வின், பிரதீஸ், கமலநாதன், சிவதர்சன் ஆகியோருக்கு மாணவர்கள் சார்பாகவும், துளி நற்பணிமன்றம் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னசத்திரம் ஆயிரம் கட்டல், ஆலயம்பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்.


பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த அமரர் நவரத்தினம் நல்லதம்பி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி தினத்தை முன்னிட்டு சுவிஸ் ஜெனிவாவில் வசிக்கும் அவரது மகள் சிவரூபன் கருணகலா குடும்பத்தினரால் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்குக்கு 32260 ரூபா அனுப்பிவைத்திருந்தனர் இப் பணத்திலிருந்து,பெற்றோரை இழந்து துவிச்சக்கர வண்டிகளை வாங்குவதற்கு வசதியின்மை காரணமாக தாங்கள் நீண்ட காலமாக பாடசாலைக்கு பெரும் சிரமத்தின் மத்தியில் நடந்தே செல்வதாகவும் தமக்கு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு துளி நற்பணி மன்றத்திடம் இரு மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவ் இரு மாணவிகளுக்கும் இன்று 25/12/2016 ஞாயிற்றுக்கிழமை மன்றக்காரியாலயத்தில் வைத்து செயலாளர் யாதவன் தலைமையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன,அமரர் நவரத்தினம் நல்லதம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், இவ் உதவியிணைப்புரிந்த சிவரூபன் கருணகலா குடும்பத்தினருக்கு இரு மாணவிகள் சார்பிலும், துளி நற்பணி மன்றத்தின் சார்பிலும் நன்றி களை த்தெரிவித்துக்கொள்கின்றோம்

************************************************************************************

வளரும் பயிர்கள் வாடாதிருக்க நீராயிருப்போம் நாம்....

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதலான மாணவர்கள் சித்தியெய்திய பாடசாலையான கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை மாணவர்களையும் ,கிளி மாவட்டத்தில் மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடங்கைப் பிடித்த மாணவர்களையும் பாராட்டி பரிசளிப்பு விழா 2/12/2016 அன்று கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலையில் துளி நற்பணி மன்றத்தினரால் நடாத்தப்பட்டது 

மேற்படி நிகழ்வானது துளி நற்பணி மன்றத்தின் தலைவர் Dr.ப .தவகீதன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக 
திரு சிற்றம்பலம் கணேசலிங்கம் உதவிக் கல்வி பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி ) வலயக்கல்வி பணிமனை கிளிநொச்சி 
திரு .மகாலிங்கம் பத்மநாதன் உதவிக் கல்வி பணிப்பாளர் (ஓய்வுநிலை) தலைவர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் கிளிநொச்சி 
திருமதி காஞ்சனா சிவகரன் முதல்வர் கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை 
திரு இராசரத்தினம் பங்கையற்செல்வன் முதல்வர் கிளி/ வட்டக்கச்சி ஆரம்பப்பாடசாலை 
திரு தேவராசா நிகோதரன் ஆசிரியர் கிளி/ வடட்க்கச்சி ஆரம்பப்பாடசாலை
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் மத்தியில்சிறப்புரை ஆற்றியதுடன் மாணவர்களை பாராட்டி பதக்கங்களையும் ,சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர் .அத்துடன் மாணவர்களுக்கு பரிசாக ஒவ்வொரு மாணவர்களின் பெயரிலும் தலா 2500 ரூபா வங்கியிலிட்டு வங்கிப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது மேற்படி நிகழ்வுக்கான சகல ஒழுங்களுகளையும் மன்ற செயலாளர் சி.யாதவன் உறுப்பினர்களான பா.சசிகரன்,பொ.மணிமாறன் ஆகியோர் சிறப்புற செய்தனர், நிதிப்பங்கப்பினை துளி நற்பணி மன்றத்தின் அவுஸ்ரேலிய sydney நகர அங்கத்தவர்கள் 12பேரும் வழங்கியிருந்தனர் 
இவர்களுக்கு துளி நற்பணி மன்றம் சார்பாகவும், கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை முதல்வர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் சார்பிலும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

***********************************************************************************************************அவுஸ்ரேலியா Melbourne நகரத்தில் வசிக்கும் சந்திரன், உஷா தம்பதிகளின் செல்வப்புதல்வனும், துளி நற்பணி மன்றத்தின் செயற்பாட்டாளருமாகிய துவாரகன் தனது 15வது பிறந்த தினத்தை முன்னிட்டு துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு 56,000 ரூபாவை அனுப்பிவைத்திருந்தார்.இப்பணத்தில் இருந்து கிளிநொச்சி இரத்தினபுரத்தில் இயங்கும் பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களின் உணவுத்தேவைக்காக 20,000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது .அன்றைய தினம் விசேட உணவு வழங்கியதுடன்,இல்லத்தில் உள்ளவர்களுடன் மன்றத்தின் தலைவர் Dr .ப .தவகீதன் ,செயலாளர் சி.யாதவன் மற்றும் பா.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நலம் விசாரித்து,கூடி உணவு அருந்தினர் இதையிட்டு இல்லத்தில் உள்ளவர்கள் அகமகிழ்ந்து. துவராகனுக்கு தமது இல்லத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

************************************************************************************************************லண்டன் croydon வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் விஜயலசுட்மி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சத்தியப்பிரகாஸ் தனது 17வது பிறந்ததினத்தை முன்னிட்டு துளி நற்பணி மன்றத்தினுடாக  கிளி/பரந்தனில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில்  அங்கம் வகிக்கும் குடும்பங்களில் உள்ள 20 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக சப்பாத்துக்களும், புத்தகப்பையும் சத்தியப்பிரகாசின் தாத்தா ஐ.சண்முகம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வானது 06/11/2016 அன்று காலை 11 மணிக்கு சங்கத்தின் தலைவர் திரு ரூபராஜ் சத்தியசீலராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் எமது மன்றத்தலைவர் Dr.பசுபதி தவகீதன்,செயலாளர் சி.யாதவன் மற்றும் உறுப்பினரான பா.சசிகரன்,பொ.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செல்வன்  சாத்தியப்பிரகாஷ் சென்ற ஆண்டு   தனது 16வது பிறந்த தினத்தில், முல்லை வள்ளிபுனத்திச் சேர்ந்த 3மாணவர்களுக்கு,ஒவ்வொருவருக்கும் தலா 10000ரூபா, தனியார் கல்வி நிலையக்கட்டணமாக வழங்கியமையும்,இங்கு நினைவு கூறுகின்றோம்.உறவுகளுக்கு உதவும் உள்ளம் கொண்ட,செல்வன் சாத்தியப்பிரகாஸ் அவர்களை,உற்றார் ,உறவினர்களோடு, உதவிகளைப் பெற்ற மாணவர்களும், துளி நற்பணி மன்றமும்  பல்கலையும் பெற்று நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துகின்றோம்.

உறவுகளே!! நீங்களும் துளி நற்பணி மன்றத்துடன் தொடர்பு கொண்டு உங்கள்   குழந்தைகளின் பிறந்த தினங்களுக்கு நம் தாயக மாணவர்களின் கல்வி வளர்ச்ச்சிக்கு உதவிட வாருங்கள்.

*************************************************************************************************************அமரர் பூபாலசிங்கம் சசிகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் வசிக்கும் அவரது சகோதரியான கமலினி சவுந்தரராஜன் குடும்பத்தினரால் துளி நற்பணி மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 20000 ரூபாவில் இருந்து தந்தையை இழந்து, மேலும் இரு இளைய சகோதரர்களுடன் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் இராமநாதபுரம் கிழக்கு அ .த .க பாடசாலையில் 11ம் வகுப்பில்கல்வி கற்று வரும்மாணவிக்கு கல்வியை ஊக்கிவிக்கும் முகமாக துவிசக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் துளி நற்பணிமன்றக் காரியாலயத்தில் வைத்து அமரர் சசிகரனின்தாயாரினால்21/10/2016வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி உதவியைப்புரிந்த சவுந்தரராஜன் குடும்பத்தினருக்கு ,துளி நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகள்.

*************************************************************************************கிளிநொச்சி இராமநாதபுரத்தில் உள்ள Triest Homeஎன்ற சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறுவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு உணவு வழங்குவதற்கு தேவையான நிதியினை 05/09/2016 அன்று துளி நற்பணி மன்றம் வழங்கி வைத்ததுடன், அன்றைய தினம் இரவு உணவின் போது இல்லச் சிறுவர்களுடன் துளி நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்  தனபாலன் அபிஷேக், தலைவர் பசுபதி தவகீதன் செயலாளர் சிவராசா யாதவன், மற்றும் உறுப்பினர் பாலசிங்கம் சசிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதற்கான நிதிஉதவியினை அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கோவிந்தராஜன் விஜி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றோம் 

***********************************************************************************************************************

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கோவிந்தராஜன் விஜி குடும்பத்தினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிதியில் இருந்து ஒருதொகை பணத்தில், சென்ற வருடம் துளி நற்பணி மன்றத்தினால் உதவி வழங்கப்பட்ட 15 மாணவர்களில் ,ஒரு மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்கும், மற்றைய மாணவன் பாடசாலையில் வகுப்பில் திறமைச் சித்தியடைந்தமையை முன்னிட்டு 27/08/2016அன்று சனிக்கிழமைஇரு மாணவர்களை பாராட்டி கற்றல் உபகரணங்களும், 1000 ரூபா பணமும் பரிசுகளாக வழங்கப்பட்டது.


*********************************************************************************

பாடசாலை விடுமுறைக்கு தாயகம் சென்ற போது ,தாயக மாணவர்களின் கல்விக்காக நான் செய்து வரும் உதவித்திடடத்தின் வளர்ச்சிப்படியாக எனது ஒருங்கிணைப்பின் அனுசரணையுடன் தொடங்கப்பட்ட துளி நற்பணி மன்றத்தின் காரியாலயத்தை 21/08/2016 அன்று  ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்ததுடன், அன்றைய தினம் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்கு நடந்து செல்லும் மாணவர்களின் நன்மை கருதி 10 மாணவர்களுக்கு மிதி வண்டிகளையும் வழங்கிவைத்தேன்.


 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனதும், எனது மச்சானின் பிறந்ததினத்தை முன்னிட்டு பரந்தனிலுள்ள எனது உறவுக்காரரான யாதவன் அண்ணா தெரிவு செய்து தந்த பரந்தனைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு மொத்தம்  15000ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்ததுடன், மேலும்முகப்புத்தகம் மூலம் அறிமுகமான யோ. புரட்சி என்பவர் தெரிவு செய்து தந்த வள்ளிபுனத்தை சேர்ந்த கா. பொ. உயர்தரம் படிக்கும்  மூன்று மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையக் கட்டணச்செலவாக  ஒவ்வொருவருக்கும் தலா 10 000ரூபா பணம்  வழங்கி வைக்கப்பட்டது.இன் நிகழ்வை யாதவன் அண்ணாவும், யோ புரட்சியும் சேர்ந்து சிறப்புற நிகழ்த்தி வைத்தனர்                                                                          

##########################################################################################எனது அம்மா ,அப்பா சொல்லியும் முகப்புத்தகம் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தும் நான் தாயகம் சென்று வரும் போது தெரிந்து கொண்டதற்க்கு அமைவாக நடந்து முடிந்த கொடிய  போரினால் அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் ,அவையங்களை இழந்து தொழில் செய்யமுடியாமல் இருக்கும்  குடும்பங்களில் உள்ள பிள்ளைகள்,சொத்துக்களையும் வருவாய் தருவனவற்றையும் இழந்து வறிய நிலையிலுள்ள குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியது .அதை எனது உழைப்பின் மூலமே செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், எனது 14வது வயதில் கிழமையில் ஒரு நாள் பத்திரிகை போடும் வேலையில் சேர்ந்து மாதம் 80 யூரோ சம்பளம் பெற்றுக்கொண்டேன். அதில்  12 யூரோ ஒவ்வொரு மாதமும் Unicef   சிறுவர் உதவித்திட்டத்துக்கு  அனுப்பி வைக்கின்றேன்.மிகுதி சேர்ந்த பணத்தில் , நான் கடந்த ஆண்டு (2015ல்)தாயகம் சென்ற போது வடமாகாண உறுப்பினர் மதிப்புக்குரிய துரைராசா ரவிகரன் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 15மாணவர்களுக்கு  தலா ஒவ்வொருவருக்கும் 5000ரூபா பணமாகவும், நான் ஜெர்மனியில் இருந்து கொண்டுசென்ற பாடசாலைப் பொருட்களுடன் மேலும் 7500ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வாங்கி பகிர்ந்தளித்தேன்.

அவை தொடர்பான விபரங்களும்,சில புகைப்படங்களும் .       

1. கேதீஸ்வரன் 
    பண்பரசி   தரம் 03 , முல்லைத்தீவு சிசி  தமிழ்கலவன் பாடசாலை                            ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.  குகனேஸ்வரன்
   சன்சிகா       க ,பொ, தா, உயர்தரம்  வித்தியானந்தக்கல்லூரிமுள்ளியவளை    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

3. பிரகலாதேவன்  
   கோமகன்   தரம்         07       நெல்லியடி மத்திய கல்லூரி                                                    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  4. சிவநேசராசா                                                                                                             மிதுசியா    க பொ தா  உயர்தரம்       வித்தியானந்தக் கல்லூரி                                 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


5.திருநாவுக்கரசு  
  அருளினி    க பொ தா  உயர்தரம்       உடையார்கட்டு ம வி                                    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.செல்வராசா  
 தமிழ்க்குமரன்    தரம்          09      கலைமகள் வித்தியாலயம்                                             ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  7.விக்கினேஸ்வரன் 
திபூசனா     தரம்           06 வள்ளிபுனம் உ த வித்தியாலயம்                                                  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.மகேந்திரன்     
 கம்சியா       தரம்        06         வற்றாப்பளை மகாவித்தியாலயம்                                      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.வில்சண்டிப்போல்
வின்சலா     க பொ தா  உயர்தரம்    வித்தியானந்தக்கல்லூரி                                     ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10.கோகுலதாசன்
  யக்சினி    தரம்             01  சிசுவனாதர் ஆரம்பப்பாடசாலை                                                +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11.ஸ்ரிபன்   
 சாருசன்        தரம்          04           சிசுவனாதர் ஆரம்பப்பாடசாலை                                      

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 12.ஆறுமுகசாமி 

     தமிழ்நிலா    தரம்               06      புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.சிவகுமார்
       கோபிதன்        தரம்         05        ஸ்ரீ சுப்பிரமணியவித்தியாலயம்                                   ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14.சில்வஸ்ரர் 
    விதுசனா           தரம்       09  ஸ்ரீ சுப்பிரமணியவித்தியாலயம்                                          +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15.குகநேசன் 
     உமைநேசன்   தரம்                03    வல்வை  ஆ சி                                                            
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள மகாதேவா ஆச்சிரமத்திற்கு சென்று எனது தாத்தாவின்  நினைவாக மாணவர்களுக்கு மதிய  விசேட உணவு வழங்க்குவதற்கு 38200ரூபா  வழங்கியதுடன்,அன்றைய பொழுதை அவர்களுடன் இருக்கும் நோக்குடன் நான் கொண்டுசென்ற கற்றல் உபகரணங்களுடன் மேலும் 2000ரூபாவுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கி அவர்களுக்கு சிறு போட்டிகள் வைத்து வென்றவர்களுக்கு பரிசில்களாக வழங்கினேன்

அத்துடன் அன்றைய இரவு உணவுக்கான செலவுத்தொகையாக 20000ரூபா பணமும் வழங்கினேன்

அவை தொடர்பான விபரங்களும்,சில புகைப்படங்களும்