பற்றிக்ஸ் மாணவன் செல்வநித்திலன் சாதனை : இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கம்!

979123522637

எண்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய 42 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி தாய்லாந்தில் கடந்த 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் சிவபாலன் செல்வநித்திலன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை காலம் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
   இந்தப் போட்டிக்காக மாணவர்களைத் தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்பும் பணியை, கொழும்புப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறையும், இலங்கை பௌதிகவியல் நிறுவனமும் 2005 ஆம் ஆண்டு முதல் இணைந்து செயற்படுத்தி வருகின்றன.ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கிடையில் ஆண்டு தோறும் அகிலஇலங்கை ரீதியாக நடைபெறும் இலங்கை பௌதிகவியல் போட்டிப் பரீட் சையில் அதிஉயர் புள்ளிகள் பெற்ற மாணவர்களே ஆசிய மட்டப் போட்டிக்கும், பின்னர் சர்வதேச மட்டப் போட்டிக்கும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
 
மாணவன் செல்வநித்திலன் 2010 ஜூலை மாதம் நடைபெற்ற அகில இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் 100 புள்ளிகள் பெற்று ஆசிய மட்டப் போட்டிக்கான எண்மர் குழுவுக்குத் தெரிவானார்.

இஸ்ரேல் நாட்டில் 2011 மே மாதம் நடைபெற்ற இந்த 12 ஆவது ஆசிய பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் கௌரவக் குறிப்புச் சான்றிதழ் பெற்ற ஒரேயொரு இலங்கையர் இவராவார்.

இதில் 17 ஆசிய நாடுகள் பங்குபற்றின.தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த 42 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம் பியாட்டில் பங்கு பற்றிய ஐவர் கொண்ட இலங்கைக் குழுவிலும் இடம்பெற்ற இவர், இந்தப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெறுகின்றார். மேலும் இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கங்களையும், ஒருவர் கௌரவ குறிப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

ஜேர்மனில் மெய்வல்லுனர் போட்டிகளில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன்

Sarujan-

ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார்.
இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது தாயாரின் அதிகளவான ஊக்குவிப்பால் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துமாறு 7 வயதே நிரம்பாத நிலையில் 421m தூரத்தை 1:38 நிமிடத்தில் ஓடி முதலாம் இடத்தை தட்டி தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார் சாருஜன்.இதன் பின்பு இவர் SUS 09 Dinslaken என்ற கழகத்தில் சேர்ந்து தனது வயது பிரிவிற்குரிய 50m ஓட்டம், நீளம்பாய்தல், பந்து எறிதல் (Dreikampf) ஆகிய விளையாட்டுக்களில் அதி தீவிர பயிற்சி எடுத்து முதல் கட்டமாக தனது நகரில் நடை பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து எல்லாவற்றிலும் முதல் இடங்களை பெற்றுக் கொண்டார்.

இவரது ஊக்கத்தைக்கண்ட பயிற்றுவிப்பாளர் (Trainer) ஏழு வயதே நிரம்பாத நிலையில் சாருஜனால் முடியுமெனக் கூறி எட்டு வயதுப் பிரிவினருடன் Oberhausen ல் (ஒபகோசன்) 13 June 2009 நடைபெற்ற Reg Kreis besten kampfe என்ற Kreis ரீதியான போட்டிக்கு அனுப்பினார். அதிலும் முதல் எட்டுப்பேருக்குள் மூன்று போட்டிகளிலும் (Dreikampf) தெரிவு செய்யப்பட்டு சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.

பின்பு அடுத்த கட்டமாக TV Walsum Aldenrade 07 என்ற கழகத்தால் Duisburg ல் 08.11.2009 நடைபெற்ற உள்ளரங்க விளையாட்டுகளில் நின்று கொண்டு நீளம் பாய்தல் 1.70 m பாய்ந்து முதலிடத்தையும் 30m ஓட்டத்தை 5.81 செக்கனில் ஓடி முதலிடத்தையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையம் வென்றெடுத்து பயிற்றுவிப்பாளர் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

அடுத்தடுத்து நடைபெற்ற 1000m (Kreis Cross Meister Schaften – Wesel 31 January 2010) தூரத்தை 0:06:13 நிமிடத்தில் ஓடி முடித்து சான்றிதழையும் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார். 20 February ல் 2010 ல் Oberhausen ல் 850m ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 0:03:59 நிமிடத்தில் ஓடி சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து 20 March 2010 ல் நடைபெற்ற Kreis Rhein – Lippe (Kreis Hallen Meister Schaften) என்ற எட்டு வயதின் இறுதிக்கட்ட உள்ளரங்க விளையாட்டுகளில் நின்று கொண்டு நீளம் பாய்தலில் (Standweitsprung) 1.81 m பாய்ந்து முதலிடத்தையும் 30m ஓட்டத்தில் 5:78 செக்கனில் ஓடி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது மாத்திரமின்றி NRZ (Neue Rhein Zeitung), Rheinische Post ஆகிய பத்திரிகைகளிலும் இவரது சாதனைகள் வெளிவரத் தொடங்கின.

அதன் பின் Moers ல் (மோர்ஸ்) நடைபெற்ற Mai sport fest ல் கலந்து கொண்டு 50m ஓட்டம், நீளம் பாய்தல், பந்து எறிதல் (8:89 sec, 3.15m, 22.0m) ஆகிய மூன்றிலும் முதலிடத்தைப் பெற்று பதக்கங்களையும், சான்றிதழையும் தனதாக்கிக் கொண்டார்.

கடந்த மாதம் (05 June 2010) Bottrop ல் (பொட்ரொப்) நடைபெற்ற Kreis-Rhein – Lippe (Reg Kreis Besten Kämpfe) என்ற போட்டியில் கலந்து கொண்டு 50m ஓட்டம், நீளம் பாய்தல், பந்து எறிதல் (8:56 Sec, 3.50m, 25.00m) ஆகிய மூன்றிலும்(Dreikampf) முதலிடத்தைப் பெற்று சான்றிதழைப் பெற்றது மாத்திரமல்லாது ஜேர்மன் பத்திரிகைகளில் இவரது சாதனையைப் பாராட்டி இவர் ஒரு “பச்சை தீட்டாத வைரம்” (Rohdiamant) என்று வர்ணிக்கப்பட்டார்.

இவரது பெற்றோரின் ஊக்குவிப்பாலும் அவரது அயராத உழைப்பாலும் ஜேர்மனியில் நடைபெறும் அவரது மாநிலத்தில் எட்டு வயதுப் பிரிவினரின் இறுதிக்கட்ட போட்டியில்(Kresmeister Schafter – Finale) இந்த மாதம் Bottrop ல் நடைபெற்ற (11 July 2010) 50m ஓட்டம், நீளம்பாய்தல் (8:49 sec, 3:58m) ஆகியவற்றில் முதலிடத்தையும் பந்து எறிதலில் (26.00 m) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதுமல்லாமல் ஜேர்மன் பத்திரிகைகளில் விளையாட்டுப் பக்கத்தில் இவரது பெயரே தலைப்பாக வரும்படி இவரைப்பற்றிக் கட்டுரைகள் பல வந்துள்ளன.

இது மாத்திரமின்றி சாருஜனின் திறமையை அறிந்து கொண்ட கொக்கி (Hockey) கழகத்தினர் (TV Jahn Hiesfeld) இவரை தமது அணியில் வந்து சேரும்படி பெற்றோரிடம் கேட்டுக் கொண்டதனால் இவர் இப்போது ஓராண்டு காலமாக கொக்கி விளையாடி வருகிறார்.

இவர் கொக்கி கழகத்தில் சேர்ந்து இரண்டு மாதம் பயிற்சி பெற்ற நிலையிலேயே மாநில ரீதியான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார். முன்கள ஆட்டவீரராக ஆடும் சாருஜன் முதல்போட்டியிலிருந்தே அவரது அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஆட்ட வீரராக திகழ்கின்றார்.

இந்த ஆண்டு நடைப்பெற்ற மாநில ரீதியான போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட Goal களை அடித்து அத்துறையிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தது மாத்திரமல்லாது கொக்கி ரீதியாகவும் Rheinishe Post என்ற பத்திரிகைகளில் இவரது பெயர் வந்து கொண்டிருக்கின்றது.

இதை விட தமிழர் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களையும், வெற்றிக் கிண்ணக் கோப்பைகளையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்

imagesயாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார். இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான Sheffield பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியற் கல்வியை (B.Eng.Electronic Engg) 2007 ம் ஆண்டு பூர்த்தி செய்து இங்கிலாந்து ரீதியான தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தச் சாதனைக்காக இவருக்கு Sie William Siemen Medal பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை உலகளாவிய ரீதியில் திறமை வாய்ந்த இங்கிலாந்து cambrige பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று தொடர்ந்தார். இங்கு முதலில் Master Of Physicology in Electronic Engg மற்றும் Doctor Of Physicology in Electronics Engg என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது ஆராய்ச்சி கண்டு பிடிப்புக்கள் இங்கிலாந்து பத்திரிகைகளிலும் பல்வேறு ஆங்கில இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு Patients Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் தற்போது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system ஆனது பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்பான inteligent wireless passive sensor technology system விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது. இவரது கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் பாதுகாப்பு சேவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

யாழ்.மாணவி புதிய சாதனை

imagesCAZCKK4D

இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார்.இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சே.தனுஷா நேற்று முறியடித்துச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.
 
கனிஷ்ட பிரிவுக்கான இந்தத் தடகளப் போட்டிகள் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று இடம்பெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் கே.தனுஷா 3 மீற்றர் தாண்டி முதலிடத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் மற்றொரு மாணவியான எஸ்.ஜக்சனா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
 
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரர்களான வி.லவணன் 3.40 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாம் இடத்தையும், கே.றொசான் 3.30 மீற்றர் உயரம் தாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இந்தப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 43 வீர, வீராங்கனைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 10 வீர, வீராங்கனைகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

தேம்ஸில் நீந்திய செல்வி வர்ஷினி தியாகலிங்கம்.

resize_20110703114844

பிரித்தானியாவில் உள்ள காரைநகர் நலன்புரிச்சங்கத்துக்கு நிதிசேர்க்கும் தொண்டு நடவடிக்கைக்காக ஈழத்தமிழ் பெண்ணான செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் நடைபெற்றது. இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்தனர். இதில் காரைநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டுள்ளார். செல்வி வர்ஷினி தியாகலிங்கம் இத் தொண்டு நீச்சல் மூலம் இதுவரை 5647 பவுன்ஸ்களை நிதி நன்கொடையாக ஈட்டியுள்ளார். இதனை இவர் காரைநகர் நலன்புரிச் சங்கத்தினூடாக காரைக்கு அனுப்பிவைக்கவுள்ளார். வேற்றின மக்களோடு நாம் பல நிகழ்வுகளில் கலந்து அவர்களோடு பங்கெடுப்பதன் மூலம், எமது விடுதலைக்காகவும் அவர்கள் குரல்கொடுப்பார்கள் என்பதனை தமிழர்கள் நினைவில்கொள்வது அவசியம்

அமெரிக்க தலைமைத்துவ உச்சிமாநாட்டுக்கு இரு இலங்கை தமிழ் மாணவிகள் .

Jaff-girls1அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆற்றல்மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாட்டில் இரு இலங்கைத் தமிழ் மாணவிகள் பங்குபற்றும் பெருமையை பெற்றுள்ளனர். உலகின் 30 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல்மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். 2012 ‘செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு’ ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இம்முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர். அடுத்த தலைமுறையினருக்கு மிக அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பினைப் பெற்ற 33 பேரில் ராகா ரகுநாதன், லக்ஷ்மி சரவணபவன் ஆகிய இரண்டு தமிழ் மாணவர் தலைவர்களும் அடங்குவர்.

தமிழரின் சாதனை-கே.ஆர். ஸ்ரீதர்

 

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

 

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம்

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம்

கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவகுமார் மேகலதன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணசிங்க்ம் பிரணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரதேவன் ராம்ராஜ் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த சண்முகலிங்கம் குருபரன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

 

பருத்தித்துறை மெதடிஸ்த உயர் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணராஜா ரம்யா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சந்திரசேகரன் பானுபிரியன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

பூநகரி ஜெயபுரம் பல்லவராஜன்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சிவஞானம் மகேஸ்வரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

திருவையாறு மகா வித்தியாலத்தை சேர்ந்த நாகேஸ்வரன் சுதர்வண்ணன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இராமநாதபுரம் வட்டக்கட்சி தமிழ் மகாவித்தியாலயத்தை சேர்ந்த யசோதரன் ஹரிராம் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலத்தை சேர்ந்த இராஜேந்திரன் தர்சினி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தை சேர்ந்த அமிர்தநாதன் பிரவீன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

 புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஆறுமுகம் மிதுர்சா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

 யோகபுரம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மகாலிங்கம் அகத்தியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வநாயகம் சுபரஞ்சனி   நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனிக்குளம் பாலிநகர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த தங்கவேல் துவாரகா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

திருகோணமலை சென் மேரி கல்லூரியைச் சேர்ந்த தபிபா தயாளநேசன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கிண்ணியா அல் அக்ஸா மகாவித்தியாலயத்தை சேர்ந்த லபீர் நவீத் மொஹமட் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

உவர்மலை விவேகாநந்தா கல்லூரியைச் சேர்ந்த சங்கராதாஸ்; தக்சனா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

 திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த ரட்னகுமார் ராஜன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியைச் சேர்ந்த துவாரகா வரதராஜன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தனபாலசிங்கம் திவாகரன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியா முஸ்லிம் மத்திய மகாவித்தியாலத்தின் அப்துல் ஹமீட் பாத்திமா சுமையா, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த மோகனகாந்திராசா கஜன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியா ரம்மைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சம்பிரதா மகேந்திரன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த கருணாநிதி பிரகாந்தன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

அம்பாறை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் குகேந்திரன் நுகாந்தமி முதல் இடம் பெற்றுள்ளார்

மட்டக்களப்பில் விபுலாந்த மத்திய கல்லூரியை சேர்ந்த லோகேஸ்வரன் லெனுஸா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியைச் சேர்ந்த கனகராஜா மயூரிகா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

அக்கரைப்பற்று ஹபீபுல்லா ஹஜ்மலா ஆயிஸா அக்கரைப்பற்று மகளிர் மஹா வித்தியாலயம் மொஹமட் லபீர் லாசிம் சிராஜ் அக்கரைப்பற்று மகாவித்தியாலயம் ஆகியோர் நான்காம் இடம்தை பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பில் பிரணவி வரதராஜன் சிசிலியா பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மட்டக்களப்பில் அபிநயா நல்லரத்தினம் வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு பெலிசீயா மேரியன் தனஞ்சி செல்லப்பிள்ளை சிசிலியா பாடசாலை  மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஜசிதா சிவநாதன் வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

வின்சன்ட் மகளிர் உயர் கல்லூரியை சேர்ந்த கோப்புஜிதா ஆத்மராஜா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

புத்தளம் ரத்மல்யாய அல் குவாஸ்னியா மத்திய மகாவித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மன்னாரைச் சேர்ந்த அஹமட் அஸ்லாம் பாத்திமா அக்ஷா முதலாம் இடத்தை
பெற்றுள்ளார்.

இலங்கைராசன் ரேணுகா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மன்னார் புனித செபஸ்தியன் பெண்கள் கல்லூரியை சேர்ந்த மோகன் நவீனா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

புத்தளம் அல் குவாஸ்மியா மத்திய மகாவித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மன்னாரைச் சேர்ந்த மொஹமட் நஜ்மி பாத்திமா நஸ்கா நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியைச் சேர்ந்த வைகுந்தவாசன் கஜேந்திரன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

நுவரெலியாவில் நான்காம் இடத்தை ஹட்டன் ஹைல்ன்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த ராமசந்திரன் திலக்சன் பெற்றுள்ளார்.

புத்தளம் மன்னார் வீதி சாஹிரா தேசிய கல்லாரியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மதுசான் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் 9A சித்தி

கடந்த ஆண்டு (2010) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையில் திருமலை மாவட்டத்தில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 12 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (9) A சித்தியைப் பெற்று இக்கல்லூரிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

இக்கல்லூரியிலிருந்து கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 160 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 151 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தமைமையைப் பெற்றுள்ளனர்.

koneswar

கல்லூரியின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெறுபேறுகள்,
12 மாணவர்கள்  9 A
03 மாணவர்கள்  8 A  1 B
01 மாணவர்        8 A  1 C
07 மாணவர்கள்  7 A  2 B
07 மாணவர்கள்  7 A  1 B  1 C
04 மாணவர்கள்  6 A  3 B
02 மாணவர்கள்  6 A  2B   1 C

திருமலை மாவட்டத்தில் சிறந்த கல்வி நிலையமாக இக்கல்லூரி தொடர்ந்தும் முன் நிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளையவர்களுக்கு கனடிய பாரளுமன்ற உறுப்பினர் ஐன்ரின்ரூடோ புகழாரம்

கியுபெக் தமிழ் இளையவர்களின் தலமைத்துவம் ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது என கனடிய பாரளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் முக்கியஸ்தருமான ஐன்ரின்ரூடோ புகழ்ந்துள்ளார்.மார்ச் 12 சனிக்கிழமை கனடியத் தமிழர் பேரவையின் கியுபெக் கிளையினரின் ஏற்பாட்டில் மொன்றியலில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இராப்போசன விருந்துபசார வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே ஐன்ரின்ரூடோ மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் கனடிய அரசியல் பிரமுகர்கள், கல்வியிலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கென்சவேர்ட்டிவ், லிபரல், புளொக் கியுபெக்குவா, என்.டி.பி ஆகியனவற்றின் முக்கியஸ்தர்களும் உள்ளூர் அரசியல் கட்சியான புரொnஐக்ட் மொன்றியல் முக்கியஸ்தர்களும், பார்க் நகரசபை உறுப்பினரும் கலந்துகொண்டு சிறப்புரைகளை ஆற்றியதோடு தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிகழ்வானது தமிழ் மக்களின் பலதிறமைகளை வெளிக்கொண்டுவருவதற்காகவும், அவர்களின் அரசியல், கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்தினை ஊக்குவிப்பதற்காகவும், கனடாவின் பல்கலாச்சார உறுதித் தன்மையில் தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதாகவும் கியுபெக்கில் தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இரவுப்போசன விருந்துபசாரமாக அமைந்தது. அத்துடன் தமிழ்சமூகத்தின் கலை, கலாச்சார அம்சங்கள் நடனம் மற்றும் இசை விருந்துகள் ஊடாக பகிரப்பட்டதோடு, சமூகத்தின் இளம் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

mon5

இதில் முக்கியமாக தனது 13 வயதில் இருந்து புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் செல்வன் உத்தமகுமாரன் அபிக்குமரன் கௌரவிக்கப்பட்டார்.