பற்றிக்ஸ் மாணவன் செல்வநித்திலன் சாதனை : இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கம்!

எண்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய 42 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி தாய்லாந்தில் கடந்த 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் சிவபாலன் செல்வநித்திலன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை காலம் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
   இந்தப் போட்டிக்காக மாணவர்களைத் தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்பும் பணியை, கொழும்புப் பல்கலைக்கழக பௌதிகவியல் [...]

ஜேர்மனில் மெய்வல்லுனர் போட்டிகளில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன்

ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார்.
இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது [...]

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்

யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் [...]

யாழ்.மாணவி புதிய சாதனை

இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார்.இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை [...]

தேம்ஸில் நீந்திய செல்வி வர்ஷினி தியாகலிங்கம்.

பிரித்தானியாவில் உள்ள காரைநகர் நலன்புரிச்சங்கத்துக்கு நிதிசேர்க்கும் தொண்டு நடவடிக்கைக்காக ஈழத்தமிழ் பெண்ணான செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் நடைபெற்றது. இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்தனர். இதில் காரைநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் [...]

அமெரிக்க தலைமைத்துவ உச்சிமாநாட்டுக்கு இரு இலங்கை தமிழ் மாணவிகள் .

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆற்றல்மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாட்டில் இரு இலங்கைத் தமிழ் மாணவிகள் பங்குபற்றும் பெருமையை பெற்றுள்ளனர். உலகின் 30 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல்மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். 2012 ‘செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு’ ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இம்முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் [...]

தமிழரின் சாதனை-கே.ஆர். ஸ்ரீதர்

 

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து [...]

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம்

கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவகுமார் மேகலதன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணசிங்க்ம் பிரணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரதேவன் ராம்ராஜ் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த சண்முகலிங்கம் குருபரன் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

 

பருத்தித்துறை மெதடிஸ்த உயர் கல்லூரியைச் சேர்ந்த ரட்ணராஜா ரம்யா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தை [...]

திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் 9A சித்தி

கடந்த ஆண்டு (2010) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையில் திருமலை மாவட்டத்தில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 12 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (9) A சித்தியைப் பெற்று இக்கல்லூரிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

இக்கல்லூரியிலிருந்து கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 160 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 151 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தமைமையைப் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெறுபேறுகள்,
12 மாணவர்கள்  9 A
03 மாணவர்கள்  8 A  1 [...]

தமிழ் இளையவர்களுக்கு கனடிய பாரளுமன்ற உறுப்பினர் ஐன்ரின்ரூடோ புகழாரம்

கியுபெக் தமிழ் இளையவர்களின் தலமைத்துவம் ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது என கனடிய பாரளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் முக்கியஸ்தருமான ஐன்ரின்ரூடோ புகழ்ந்துள்ளார்.மார்ச் 12 சனிக்கிழமை கனடியத் தமிழர் பேரவையின் கியுபெக் கிளையினரின் ஏற்பாட்டில் மொன்றியலில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இராப்போசன விருந்துபசார வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே ஐன்ரின்ரூடோ மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் கனடிய அரசியல் பிரமுகர்கள், கல்வியிலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் [...]